Main Menu

நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

ஆபிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மக்கள் அனைவரையும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வைரஸ் குறித்து விரிவாக ஆராய வேண்டியிருப்பதாக ஆபிரிக்க நோய்த்தொற்று தடுப்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரித்தானியா தவிர டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தனது மரபணுவை மாற்றிக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பகிரவும்...