Main Menu

நிலாவில் மனிதர்களைக் குடியேற்றத் திட்டங்களை வகுக்கும் நிறுவனங்கள்

நிலாவில் மனிதர்களைக் குடியேற்றத் திட்டங்களை வகுத்து வருகின்றன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள்.

நிலாவின் நிலத்தடியைத் தோண்டி வீடுகள் கட்டி, மக்களைக் குடியேற்றுவது அவற்றின் திட்டம்.

தற்போது விண்வெளி தொடர்பாக மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், அங்குத் தங்க மக்கள் விருப்பப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 2024ஆம் ஆண்டிற்குள் மனிதர்கள் நிலாவில் வசிக்க வசதிகள் செய்யவேண்டும் என்று NASA-விடம் கூறியிருந்தார்.

செல்வந்தர்கள் இலான் மஸ்க் (Elon Musk), ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) இருவரும் விண்வெளி தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நிலாவில் அதிகக் கதிர்வீச்சு, உறைய வைக்கும் குளிர் போன்றவை மனிதர்களுக்குச் சவாலாக இருக்கும் என்றும் அதற்கேற்பத் தங்குமிடங்கள் கட்டப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

2050ஆம் ஆண்டிற்குள் 1,000 பேராவது நிலாவில் வசிப்பார்கள் என்றும், அவர்களுக்கான தங்குமிடங்கள் அமைக்க கிட்டத்தட்ட 2.7 டிரிலியன் டாலர் செலவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பகிரவும்...