Main Menu

நிலவிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்புகின்றது சீன விண்கலம்!

சீனாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது.

“சாங்கி-5“ என்ற இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த தரையிறங்கு கலம் கடந்த முதலாம் திகதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்தது.

கடந்த 3ஆம் திகதி இந்த கலம் நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டு, விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

இதையடுத்து சீனாவின் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...