Main Menu

நாளை ஆரம்பிக்கின்றது ரமழான்! – பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

நாளை செவ்வாய்க்கிழமை புனித ரமழான் மாதம் ஆரம்பிக்கின்றதாக பரிஸ் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.  நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிஸ் பெரிய பள்ளிவாசலில் பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். பின்னர் ஏப்ரல் 13 ஆம் திகதி நாளை செவ்வாய்க்கிழமை ரமழான் மாதம் ஆரம்பிக்கின்றதாக அறிவித்தனர்.   அதனை அடுத்து Eid al-Fitr பண்டிகை வரும் மே மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்று இந்த ரமழான் நோன்பு பண்டிகை நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் ஆறு மில்லியன் இஸ்லாமியர்கள் உள்ளனர் எனவும், பிரான்சில் இரண்டாது அதிகூடிய மதத்தினர் இஸ்லாமியர்கள் எனவும்,  ஐரோப்பாவில் முதன்முறையாக ’பிரெஞ்சு முஸ்லிம் சமூகம்”  தோன்றியது பிரான்சில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...