Main Menu

பிரான்சுக்கு புதிய தடுப்பூசி Johnson & Johnson

கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசி  இன்று திங்கட்கிழமை பிரான்சை வந்தடைகின்றது.  அமெரிக்க தயாரிப்பான Johnson & Johnson நிறுவனத்தின் தடுப்பூசிகளே பிரான்சை வந்தடைகின்றன. இந்த தடுப்பூசிகளை ஆராய்ந்த ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம், இதனை பயன்படுத்த அனுமதி அளித்தது. அதன்பின்னர் இந்த தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டினை அரசு மேற்கொண்டிருந்தது.  அதை அடுத்து, இன்று திங்கட்கிழமை முதல்கட்டமாக 200.000 தடுப்பூசிகள் பிரான்சை வந்தடைகின்றன.  அதேவேளை, இன்று ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது வரம்பு 55 ஆக குறைக்கப்படுகின்றது. 55 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்க்கப்பட்டுள்ளது. 

பகிரவும்...