Main Menu

நாட்டில் இதுவரை டெல்டா வைரஸ் தொற்றுடன் 19 பேர் அடையாளம்

நாட்டில் இதுவரை டெல்டா வைரஸ் தொற்றுடன் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

முதன்முதலாக டெல்டா வைரஸ் தொற்றுடன் தெமட்டகொடையைச் சேர்ந்த ஐவர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஏனைய 14 பேரும் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இனங்காணப்பட்ட நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோரிடம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளோரை அடையாளம் காண்பதற்காக எழுமாற்றாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...