Main Menu

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது.

தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய, ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள்.

அதனைத் தொடர்ந்து அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து, கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன.

பக்தர்களுக்கு அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்புதிர் விழா 287 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...