Main Menu

நமீபியாவில் உயிரிழந்து கரையொதுங்கிய 7,000 சீல்கள்: காரணம் என்ன?

மத்திய நமீபியாவில் ஒரு இனப்பெருக்கம் செய்யும் காலனியில் 7,000 சீல்கள் (துடுப்புக்காலிகள்) உயிரிழந்து

கரையொதுங்கியுள்ளதாக பெருங்கடல் பாதுகாப்பு நமீபியா (OCN) என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் வால்விஸ் பே நகரத்திற்கு அருகில், பெலிகன் பாயிண்ட் காலனியின் மணல் கடற்கரைகளில் குறித்த சீல்கள் உயிரிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பின்னர் ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அதிக அளவில் சீல்கள் உயிரிழந்ததாகவும் தொண்டு நிறுவனத்தின் பாதுகாவலர் நாட் ட்ரேயர் தெரிவித்துள்ளார்.

இதுவரை அங்கு சுமார் 7000 சீல்கள் வரை உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீபியன் டால்பின் திட்டத்தின் டெஸ் கிரிட்லி 5,000 முதல் 7,000 பெண் சீல்கள் இளம் வயதிலேயே கருச்சிதைந்துவிட்டதாக மதிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், வயது வந்த பெண் சீல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருந்ததாக ட்ரேயர் கூறினார். பெரிய பெண் சீல்கள் மற்றும் குட்டிகளுமே அதிகம் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொதுவாக சீல்கள் நவம்பர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் நடுப்பகுதியில் பிறக்கும்.

குறித்த சீல்கள் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் மாசுபடுத்திகள் அல்லது பாக்டீரியா தொற்று முதல் ஊட்டச்சத்து குறைபாடு வரையிலான விடயங்களை சந்தேகிக்கின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட இறந்த பெண் சீல்களில் சில மெல்லிய தோற்றத்துடனும் மிகக் குறைந்த கொழுப்பு இருப்புக்களைக் கொண்டதாகவும் இருந்ததாக கிரிட்லி கூறினார்.

1994ஆம் ஆண்டில், சுமார் 10,000 சீல்கள் இறந்தன. இதற்கு பிறகு பதிவான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

பகிரவும்...