Main Menu

நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் அதிக ஆர்வம்

அடுத்த மாதம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் முதல்முறையாக அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் முகவர்கள் பலர் அதிபர் தேர்தல் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காக கொழும்புக்கு வந்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் எவ்வாறு எதிர்த்துப் போட்டியிடுகின்றன என்பதை கவனிப்பதற்காக புலனாய்வு அமைப்புகள் இரகசியமாக பணியில் ஈடுபட்டுள்ளன.

வெளிநாடுகளின் தலையீடுகள், மற்றும் கட்சிகளுடனான தொடர்புகள் குறித்து  அவர்கள் கரிசனை கொண்டுள்ளதாக தோன்றுகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...