Main Menu

தொடருந்திலும், பேருந்திலும் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கும் சுகாதார அமைச்சர்

தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் போது முகக்கவசம் அணியும் படி சுகாதார அமைச்சர் பிரான்சுவா பிரவுண் (François Braun) அறிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் அதிகமாக இருக்கும் போது அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் போது அனைவரும் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கிறேன்!” என தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை சுகாதார அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் 160,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...