Main Menu

தேவாலயம் மறு சீரமைக்கப்படும் – ஜனாதிபதி மக்ரோன்


பிரான்சில் தீ அனர்த்தத்தினால் சேதமடைந்த
தேவாலயத்தை (notre – dame de paris) மறுசீரமைக்க உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான
notre – dame ல் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்டது.

856 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான தீயணைப்பு படை வீரர்களினால் சுமார் 9 மணிநேரத்தின் பின்னர் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு தீயணைப்பு படை வீரர் காயமடைந்துள்ளார்.

எவ்வாறிப்பினும், குறித்து தீப்பரவல் ஏற்பட்டமைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பபவம் துன்பகரமானது என
பிரான்ஸ்
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்து தேவாலயத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேவாலயத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்காக
பிரான்ஸ் செல்வந்தரான பிரான்சுவா என்றி பினோ
(Francois-Henri Pinault ) என்பவர் 100 மில்லியன் யூரோவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பகிரவும்...