Main Menu

தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான கொள்கையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிப்போம் என்றும் அதனை இப்போது முன்னெடுத்தாலும் ஆதரவு வழங்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக கடந்த காலங்களில் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...