Main Menu

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்ற அஜித்

டிசம்பர் மாதம் போபாலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அஜித் தகுதி பெற்றுள்ளார்.

கோவையில் நடந்த 45-வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற அஜித் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். டிசம்பர் மாதம் போபாலில் நடைபெறும் போட்டியில் அஜித் கலந்துகொள்ள உள்ளார். 

நடிகர் என்பதைத் தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், புகைப்படக் கலை ஆகிய துறைகளில் தடம் பதித்தவர் அஜித். இந்தியாவிலேயே பைலட் உரிமம் பெற்ற நடிகர். கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித். அதன் மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார். அஜித்தின் வழிகாட்டுதலில் ‘தக்‌ஷா’ அணியின் ட்ரோன் (ஆளில்லா விமானம்) நீண்ட நேரம் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்தது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தக்‌ஷா அணி வெற்றி வாகை சூடியது.

கோவையில் 45-வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை  நடைபெற்றது. இப்போட்டியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்துகொண்ட நிலையில், அஜித்தும் கலந்துகொண்டார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அஜித் கலந்துகொண்ட அஜித் வெற்றி பெற்று தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். தேசிய அளவிலான போட்டி போபாலில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் அஜித் கலந்துகொள்கிறார். 

பகிரவும்...