Main Menu

துருக்கியில் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!

துருக்கியில் மீண்டும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் குளறுபடிகள் இடம்பெற்றதாக துருக்கிய ஜனாதிபதியின் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து முக்கிய நகரான அங்காராவில் மறு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி மறு தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

துருக்கியில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மார்ச் 31ஆம் திகதி நடைபெற்றது.

57 மில்லியன் மக்கள் இந்தத் தேர்தல்களில் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றிருந்ததுடன் தேர்லின் முடிவுகள் நள்ளிரவில் வெளியாகின.

தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி தையீப் எர்டோகனை முக்கிய நகரங்கள் உட்பட பல இடங்களில் அந்நாட்டு எதிர்க்கட்சி வெற்றி கொண்டிருந்தது.

இதேவேளை, மறு தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து துருக்கிய எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...