Main Menu

துயர் பகிர்வோம் -திரு. உருத்திரமூர்த்தி முருகையா ஜெயக்குமார் (06/11/2025)

தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Fontainebleau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உருத்திரமூர்த்தி முருகையா ஜெயக்குமார் (பாடகர், நடிகர், பல்துறை வித்தகர் TRT தமிழ் ஒலி) அவர்கள் 29ம் திகதி ஐப்பசி மாதம் புதன் கிழமை அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

அன்னார் காலம் சென்றவர்களான உருத்திரமூர்த்தி முருகையா-நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மகனும், இராசரத்தினம்-ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும் காலம் சென்ற உமாதேவி மற்றும் சித்திரா ஆகியோரின் அன்பு கணவரும் தனுஜா, சித்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ரவிவர்மன் (பிரான்ஸ்) பரந்தாமன், பிரேமதி (பிரான்ஸ்) அருந்தவகுமார் (தாயகம்) ஜீவசங்கர்(தாயகம்) சுகாஜனன் (தாயகம்) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியையும் இறுதிச்சடங்கும் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வியாழக்கிழமை 12:30 மணியளவில் 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse என்ற முகவரியில் உள்ள மயானத்தில் இடம்பெற்று பின் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவுத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு -0033 (0)7 83 54 75 43

அன்னாரின் இப் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து கொண்டு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறது.

 

 

பகிரவும்...
0Shares