Main Menu

துயர் பகிர்வோம் – திரு. இராஜேந்திரம் சரவணபவானந்தன் (செல்லா) 12/02/2026

யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரம் சரவணபவானந்தன்( செல்லா) அவர்கள் 11.02.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இராஜேந்திரம் நாகரத்தினம் தம்பதியினரின் ஆசைமகனும், காலஞ்சென்ற அப்புத்துரை தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், சரோஜினிதேவி (சரோ)வின் அருமைக் கணவரும், அமுதினி(சூட்டி)யின் பாசமிகு தந்தையும், பிரபாகரன்(பிரபா)வின் அன்பு மாமனாரும், சுவேதா, சுஜன், சகானாவின் அன்பு தாத்தாவும்,

காலஞ்சென்ற சதானந்தன் (பாலா-Holland ), கிருபானந்தன் (பவா-Germany ), சிவானந்தன் (பாபு-France), ஜெயராணி (பேவி-Canada), நித்தியானந்தன் (பவி-London), மகாநந்தன் (கண்ணன்-Canada), லோகானந்தன் (றமணன்-France), நந்தினி (நந்தா-Germany) ஆகியோரின் அருமை உடன்பிறப்பும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (பாலன்) காலஞ்சென்ற சிறிகாந்தா(சிறி), சந்திரமணிதேவி (Srilanka), சந்தியதேவி(France), வாசுகி (Canada) ஆகியோரின் அன்பு அத்தானும், தெய்வநாயகி (France), ரத்னமாலா (Holland) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கௌரிமனோகரி(கௌரி), வசந்தி மற்றும் குணபாலசுந்தரம்(குணம்) மாலா, விஜியந்தி, சுகேந்திரனி(பவா), விஜி, அப்பன் ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற ஞானாநந்தன், உமைபாலன்( மாஸ்டர் France), செல்வரெட்ணம் (செல்வன் Canada) ஆகியோரின் அன்பு சகலனாரும் ஆவார்.

அன்னாரின் உடல் பார்வைக்கு
12 /02/2026 வியாழக்கிழமை, பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
13 /02/2026 வெள்ளிக்கிழமை, மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
14 /02/2026 சனிக்கிழமை, பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
16 /02/2026 திங்கள், பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
17 /02/2026 செவ்வாய், பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும்

18 /02/2026 புதன்கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை, 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux இல் உள்ள Mareuil Funeral Home இல் இறுதி கிரியைகள் நடைபெற்று தனிப்பட்ட முறையில் தகனமும் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல் – குடும்பத்தினர்
பிரபா ( மருமகன்) +33 613239581
உமைபாலன் மாஸ்டர்(சகலன்) +33 651688192
பாபு (சகோதரன்) +33 699600316

அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, அவர்களின் குடும்பத்தினரின் துயரில் TRTதமிழ் ஒலி குடும்பமும் இணைந்து கொள்கிறோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆரம்பகால வரலாற்றில் மிக பெரிய மண் பற்றாளர். விடுதலைக்காய் அள்ளிக் கொடுத்து, நிகழ்வுகள் அனைத்திலும் குடும்பம் நண்பர்கள் என அழைத்து வரும் தேசியப் பற்றாளர். எமது செலவுகளை நாங்கள் தான் பார்க்க வேண்டும். எல்லோரும் இரவு பகலாக தங்களுக்கு தங்கள் குடும்பத்திற்கு என்று உழைக்கும் போது நாங்கள் விடுதலைப் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல குறைந்த நேரம் தான் வேலை செய்ய முடியும். போதாமை. அன்று பணத்திற்காக யாரும் விடுதலைக்கு வேலை செய்யவில்லை. அந்த காலத்தில் வீட்டுக்கு அழைத்து, காரியாலயத்திற்கு உணவளித்த வள்ளல். எப்போதும் சிரித்த முகம். இன்று எம்மோடு இல்லை. சென்று வாருங்கள் செல்லா அண்ணே. என்றென்றும் உங்கள் மண்பற்றை மறவோம்.
அன்பு உடன் பிறவா தம்பி
மாணிக்ஸ்.
ஆரம்ப கால உறுப்பினர்கள்.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.