Main Menu

திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா? 62% இந்தியர்கள் ஆதரவு

இந்தியாவில் கொடுக்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருதை தலாய் லாமாவுக்கு கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சாந்தா குமார், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா வழங்குவதன் மூலம், 1950ல் திபெத்தை சீனா கைப்பற்ற அனுமதித்து அப்போதைய காங்கிரஸ் அரசு செய்த பாவத்தை சரிசெய்ய முடியும்; அதற்கு இது நல்வாய்ப்பு என்று சாந்தா குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தில் செல்வாக்கு மிக்க திபெத்திய தலைவரான தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து ஐ.ஏ.என்.எஸ் C Voter Poll என்ற சர்வேயை இந்தியாவில் நடத்தியது. இந்தியர்களிடம், தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த 3000 பேரில், 62.4% பேர், தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். 21.7% பேர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கூடாது என்று கருத்து தெரிவித்தனர். 3ல் 2 பங்கு இந்தியர்கள், தலாய் லாமாவுக்கு ஆதரவளித்துள்ளனர்.

ஆதரவளித்த 62.4% பேரில் 73.1% பேர், 55 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...