Main Menu

தலிபான்களின் புதிய ஆட்சியில் வெளிநாட்டுக்கு முதல் முறையாக பயணித்த பயணிகள் விமானம்!

தலிபான்களின் புதிய ஆட்சியில். காபூல் விமான நிலையத்தின் வழியாக முதல் முறையாக பயணிகள் விமானம் பயணித்துள்ளது.

கட்டார் எயார்வேய்ஸ் விமானம் மூலம் தலைநகர் டோஹாவுக்கு இந்தப் பயணிகள் நேற்று (வியாழக்கிழமை) அழைத்து வரப்பட்டனர்.

நேற்று பிற்பகல் கட்டாரிலிருந்து மனிதாபிமான பொருட்களை பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுச் சென்றது.

அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் இறக்கி வைக்கப்பட்ட பிறகு, காபூலில் இருந்து கட்டருக்கு புறப்பட தகுதி பெற்ற பயணிகளுடன் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானத்தில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய குடிமக்கள் அடங்களாக 113 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.

அண்மையில் கட்டாருக்குச் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்பதற்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.

கனடாவைச் சேர்ந்த 43 பேரும், நெதர்லாந்தைச் சேர்ந்த 13 பேரும் மீட்கப்பட்டிருப்பதாக அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

பகிரவும்...