Main Menu

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம்- கிழக்கு தமிழர் ஒன்றியம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்கு, கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதன் செயலாளரும் ஊடக பேச்சாளருமான வி.குணாளன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வி.குணாளன்  மேலும் கூறியுள்ளதாவது, “அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இராஜாங்க அமைச்சரால் அராஜகத்துக்கு உட்படுத்தப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதாவது, பாதுகாப்பாக வைத்திருக்கப்பட வேண்டிய இடத்தில் வைத்தே, தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு உள்ளன.

இருப்பினும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் அமைந்து உள்ளன.

நாடாளுமன்றத்தில், தமிழ் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுத்தவர் நாமல். இராஜாங்க அமைச்சரின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்று கொடுக்க கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அங்கமாக சட்டத்தரணிகள் ஆலோசனை குழு விரைவில் நிறுவப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...