Main Menu

தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400 படகுகளில் சென்றிருந்த மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடியில்ஈடுபட்டிருந்தனர்.

இதன்போதே, 27 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுடன் மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களுடன் சென்றிருந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அச்சநிலையில் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய விசைப் படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களை அழித்து வருகின்றமை தொடர்பாக இலங்கை மீனவர்கள் காணொளி ஆதாரங்களுடன் முறைப்பாடு கொடுத்ததையடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு உயர் அதிகாரிகளின் உத்தரவிற்கு பின்னர், கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா அல்லது கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது தெரியவரும் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...