Main Menu

தமிழக அரசு சார்பில் வள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாடப்படும்: மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்படும்.

சுனாமி பேரலையின் போதும் கம்பீரமாக உயர்ந்து நின்றார் திருவள்ளுவர். இதுதொடர்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares