Main Menu

தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாரிய மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

இதனையடுத்து, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், கடந்த ஜூன் 19ஆம் திகதி முதல் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை, மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 31ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் 21 மற்றும் 28ஆம் திகதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கூறப்பட்ட 4 மாவட்டங்களிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

அதன்பின்னர், ஜூலை மாதமும் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், 6ஆவது கட்டமாக கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் ஜூலை முதலாம் திகதி முதல் 31ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் இந்த காலகட்டத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஜூலை 5ஆம் திகதி தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...