Main Menu

தனது அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி பெங்களூர்  சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும்,  10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.  இதற்கிடையே பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர்  சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

அவரது கேள்விக்கு கடிதம் மூலம் பதிலளித்த பெங்களூர், அக்ரஹாரா சிறை அதிகாரி ஆர்.லதா “சிறை ஆவணங்கள்படி உச்சநீதிமன்றம் விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தினால் சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27-ம்  திதகி விடுதலை ஆகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அபராதத் தொகையை செலுத்த தவறினால்  அவர் மேலும் 13 மாதங்கள் அதாவது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சசிக்கலா தனது அபராதத் தொகையை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...