Main Menu

தடையை மீறி பள்ளி வாசல்களுக்குள் நுழையும் ஈரானியர்கள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த புனித தலங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடையை பல ஈரானியர்கள் மீறியதால் அங்குள்ள அரசு செய்வது அறியாமல் திகைப்பில் உள்ளது.

குவோம் நகரில் பள்ளி வாசலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். மேற்காசிய நாடுகளில் அதிகபட்சமாக ஈரானில் கொரோனா தொற்று எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து, பலி எண்ணிக்கை 988 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் அரசின் கட்டுப்பாட்டுகளை மதிக்காவிட்டால் பலி எண்ணிக்கை ஏப்ரல் மாத வாக்கில் 12 ஆயிரத்தை தாண்டி விடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரானின் பொது சுகாதார வசதிகள் பலவீனமாக இருப்பதால் ஜுன் மாத வாக்கில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 35 லட்சத்தையும் கடந்து விடும் என டெஹ்ரானில் உள்ள ஷெரீஃப் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் அச்சம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...