Main Menu

ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளார்: மருத்துவர் ஸீன் கொன்லே!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளதாக அவரது பிரத்தியேக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்ரம்பின் பிரத்தியேக மருத்துவர் ஸீன் கொன்லே கூறுகையில், ‘டொனால்ட் ட்ரம்ப் கொரோனா தொற்றுக்கான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளார். இவ்வார இறுதியளவில் மக்கள் மத்தியில் சென்று தனது செயற்பாடுகளை மேற்கொள்ள தயாரான நிலையில் உள்ளார்’ என கூறினார்.

இதனிடையே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் இவ்வார இறுதியில் இருந்து மக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

குறித்த விடயத்தை தனது ருவிட்டர் பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியிருந்த ட்ரம்ப், மேல் சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய இராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறைந்தளவான நாட்களே சிகிச்சை பெற்ற நிலையில் ட்ரம்ப் மீண்டும் வெள்ளைமாளிகைக்கு திரும்பியிருந்தமை பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

பகிரவும்...