Main Menu

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு!

தலைநகர் டெல்லியில்,  காற்று மாசு அளவு  மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

கடந்த சில நாட்களாக காற்று மாசுவின் அளவு குறைந்திருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி பல்கலைக்கழகம், சாந்தினி சவுக்,  திர்பூர்,  உள்ளிட்ட தலைநகரின் பல பகுதிகளில்  சராசரியாக,  காற்று மாசு 370 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக டெல்லி வாழ் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடுங்குளிருடன் கூடிய பனிமூட்டமும், சாதகமான காற்று வீசாததாலும்,  காற்று மாசு மீண்டும் அதிகரித்திருப்பதாக, மத்திய காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆய்வு மையம்  விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...