Main Menu

டென்மார்க்கில் யூத கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம மனிதர்கள்

 Share Tweet அ-அ+

டென்மார்க்கில் யூதர்களின் கல்லறைத் தோட்டத்தின் 80 கல்லறைகள் மர்ம மனிதர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க்கில் உள்ள ராண்டெர்ஸ் நகரம் யூதர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். கிட்டத்தட்ட 6,000 யூதர்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள ஆஸ்ட்ரே கிர்கெகார்டு எனும் யூதர்களின் கல்லறை தோட்டத்தில், 80 கல்லறைகள் மர்ம மனிதர்களால் நேற்று சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘80க்கும் அதிகமான கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சில கல்லறைகள் பச்சை நிற சாயம் மூலம் கிறுக்கப்பட்டுள்ளன, மேலும் சில கல்லறைகளின் பெயர்ப்பலகை மற்றும் கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் கல்லறைகள் மீது எவ்வித எழுத்துக்களோ, குறியீடுகளோ எழுதப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’, என தெரிவித்தனர்.

கடந்த 2015ம் ஆண்டு டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள முக்கிய யூத வழிபாட்டுத்தலத்தின் அருகே மர்ம மனிதன் ஒருவன் யூதர் ஒருவரை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...