Main Menu

டெக்சாஸில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

டெக்சாஸ் நகரத்தில் நேற்று நடைபெற்ற நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெக்சாஸ் தலைநகரில் சுமார் 100 பேர் கலந்துகொண்ட போராட்டத்தில் தாக்குதல் இடம்பெற்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டின் போது ஒருவர் கொல்லப்பட்டதாக ஒஸ்டின் பொலிஸ் மற்றும் அவசர மருத்துவ சேவை நிலையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அத்தோடு வேறு எந்த மரணங்களும் இடம்பெறவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் ஒரு துப்பாக்கியை ஏந்தி அவரது காரில் இருந்தஒருவரை சுட்டுக் கொன்றதாகவும், குறித்த சந்தேக நபர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மினியாபொலிஸில் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த ஆபிரிக்க-அமெரிக்க ஜோர்ஜ் பிலாய்ட் மே மாதம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இனவெறி மற்றும் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான போராட்டங்கள் உலகளவில் வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...