Main Menu

கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் தொடரும் – RATP ஊழியர்கள்

நேற்று வெள்ளிக்கிழமை RATP ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தை அடுத்து கணிசமான போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இது டிசம்பர் வரை நீடிக்கும் என சில செய்திகள் வெளியாகியுள்ளன .  இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவலகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

நேற்று வேலை நிறுத்தத்தின் போது பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த  ஊழியர்கள் RATP தலைமைச் செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்தனர்.  

தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய முறையில் பலவித மாற்றங்களை கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைமையக அதிகாரிகளில் சிலர் “நாங்கள் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை. அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிராகரிக்கின்றோம்”‘ என குறிப்பிட்டார். 

CGT தொழிற்சங்க தலைவர் Philippe Martinez வானொலி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது, ஆர்ப்பாட்டம் தொடருமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “இல்லை. ஆனால் முடிந்தவரை அரசு எமது கோரிக்கைகளுக்கு விரைவாக அரசு செவி சாய்க்கவேண்டும்” என குறிப்பிட்டார்.  ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் டிசம்பர் வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். 

பகிரவும்...