Main Menu

அமேசனைப் பாதுகாக்க அமெரிக்கா – பிரேஸில் கூட்டு முயற்சி

அமேசன் மழைக்காடுகளைப் பாதுகாக்கும் வகையில் அமேசனில் தனியார் துறையை ஊக்குவிப்பதற்கு பிரேஸிலும் அமெரிக்காவும் இணங்கியுள்ளன.

இதற்கமைய, அமேசனின் உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாப்பதற்காக தனியார் துறை ஊடாக 100 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ய அமெரிக்கா – பிரேஸிலுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையில் வொஷிங்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொருளாதார வளர்ச்சிக்காக மழைக் காடுகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதே, அதனைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும் என பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் எரன்ஸ்டோ அருவ்ஜோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், அமேசன் பிராந்தியத்தை பாதுகாக்கத் தவறியதாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொசொனாரோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும், அமேசன் மழைக்காடுகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான தீப்பரவல் ஏற்பட்டு பெருமளவான காடுகள் அழிவடைந்தோடு பல்வேறு உயிரினங்களும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...