Main Menu

டிசம்பர் மாதம் 2 முதல் இங்கிலாந்தில் முடக்கத்தை நிறைவுக்கு கொண்டு வர தீர்மானம்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்தில் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதியுடன் முடக்க கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் பொரிஸ் ஜோன்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடங்கியதையடுத்து கடந்த 5 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை 4 வாரங்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2 ஆம் திகதியுடன் நாடு தழுவிய ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், மண்டல அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் மண்டல அளவிலான கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் எந்தெந்த பகுதிகளில் இருக்கும் என்பதை அமைச்சர்கள் வியாழக்கிழமை அறிவிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...