Main Menu

டயானாவின் மரணம் குறித்த மற்றுமொரு மர்மம் விலகியது!

இளவரசி டயானாவின் கார் சுரங்கப்பாதையில் உள்ள தூணில் மோதுவதற்கு முன்னர் கார் ஒன்றுடன் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

டயானாவின் கார் மோதுண்ட காரை செலுத்திய ஓட்டுநரான Le Van Thanh இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பரிஸில் அமைந்துள்ள பாண்ட் டி லா அல்மா சுரங்கத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளவரசி டயானா (36), அவரது காதலர் டோட்டி ஃபேயட் (42) மற்றும் அவர்களது சாரதி ஹென்றி பால் (41) ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் மர்மமான கார் ஒன்று காணப்பட்டதாகவும், பின்னர் அது மாயமானதாகவும் பரிஸ் நகர பொலிஸார் அப்போது குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையிலேயே ஓட்டுநரான Le Van Thanh குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் விபத்து குறித்து சாட்சியமளிப்பதற்காக இங்கிலாந்துக்கு வருமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டதாகவும், எனினும் சில பிரான்ஸ் அதிகாரிகள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளவரசி டயானாவின் கார் விபத்துக்குள்ளானமை குறித்து மீண்டும் நீதிமன்றம் ஊடான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் Le Van Thanh தெரிவித்துள்ளார்.

பகிரவும்...