Main Menu

உணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு!

உணவகங்களில் இனிவரும் காலங்களில் குழந்தைகளுக்கான உணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

சுற்றுப்புறத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்குமுன் உணவோடு சேர்த்து வழங்கப்பட்ட பிளாஸ்டிக் பொம்மைகளை, வாடிக்கையாளர்கள் விரும்பினால் மீள கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவிலும், அயர்லாந்திலும், பொம்மைகளுக்குப் பதிலாகப் பழங்களை வாங்கிக் கொள்ள முடியும் McDonald’s நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், Burger King-கின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அத்துடன், அடுத்த ஆண்டு முதல் பொம்மைகளுக்கு மாற்றீடாக புத்தகங்களை விநியோகிக்கவும் McDonald’s திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...