Main Menu

ஜூன் மாதம் இறுதி வரை பாடசாலைகள் மூடப்படும்: போலந்து அரசாங்கம்!

போலந்து பாடசாலைகள் பெரும்பாலும் எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை மூடப்பட்டிருக்கும் என அரசாங்க செய்தித் தொடர்பாளர் பியோட்ர் முல்லர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் அச்சுறுதல் காரணமாக, பாடசாலைகளும், ஆரம்ப பாடசாலைகளும் மூடப்படுவது எதிர்வரும் மே 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான தவணை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி முடிவடைகிறது, அதைத் தொடர்ந்து ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் இரண்டு மாத கால விடுமுறை.

எனினும், ஆரம்ப பாடசாலையில் சிறுவர்களுக்கு முதல் மூன்று வருட பகல் நேரப் பராமரிப்பினை வழங்குவதற்காக பாடசாலைகள் பகுதியளவில் மீள திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் பகல் நேரப் பராமரிப்பு தொடங்கப்படவுள்ளது.

எனினும், கற்பித்தல் நடவடிக்கைகள் இணைய வழி ஊடாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் முதல் தொற்றை போலந்து உறுதிப்படுத்திய மார்ச் முதல் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

போலந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 19,569பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 953பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...