Main Menu

ஜுன் 28 – இரண்டாம் கட்ட மாநகரசபைத் தேர்தல்

ஜுன் மாத இறுதியில் நடத்துவது பாதுகாப்பற்றது என, விஞ்ஞான ஆலோசனைக்குழு  தெரிவித்து, ஜனவரியில் மாநகரசபைத் தேர்தலை நடாத்துவது நல்லது எனச் சிபாரிசு செய்திருந்தது.

ஆனால் இன்று மதியம், மாநகரசபைத் தேர்தல்களின் இரண்டாம் சுற்று ஜுன் 28ம் திகதி நடைபெறும் எனத் தீர்மானமாகப் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுமன் கலந்தாலோசித்த பின்னரே, இந்த முடிவை பிரதமர் அறிவித்துள்ளார்.

5000 நகரசபைகளிற்கு இந்த இரண்டாம் சுற்றுத் தேர்தல் ஜுன் 28 இல் நடாத்தப்பட உள்ள நிலையில், இனி இரண்டாம் சுற்றிற்குத் தகுதி பெற்ற மாநகரசபை வேட்பாளர்கள், பிரச்சாரக் களத்தில் இறங்க உள்ளனர்.

இது மேலும் கொரோனாப் பரவலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. முதலாம் கட்டத் தேர்தற் பிரச்சாரத்திற்குச் சென்ற மாகரசபை முதல்வர்கள், மற்றும், உதவியாளர்கள் பலரிற்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் சாவுகளும் ஏற்பட்டுள்ளன.

இன்னமும் மிகத் தீவிரமாக வைரஸ் தொற்று இருக்கையில், அரசின் இந்த முடிவுகள் விமர்சனத்திற்கு உள்ளாக இருக்கின்றன.

பகிரவும்...