Main Menu

ஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாக அறிந்து கொண்டேன்- ராகுல்காந்தி

ஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாகக் கண்டு புரிந்துகொண்டதாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் அவனியாபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரடியாகக் கண்டுகளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன். ஜல்லிக்கட்டால் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படுவது சரியில்லை.

அத்துடன், தமிழ் மொழியைச் சிதைக்கவும் தமிழ் கலாசாரத்தைச் சீர்குலைக்கவும் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

இதனிடையே, தமிழ் மக்களிடம் இருந்து நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். அதற்காக அவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள் எனவும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நரேந்திர மோடி நாட்டிற்கான பிரதமரா, தொழிலதிபர்களுக்கான பிரதமரா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பகிரவும்...