Main Menu

ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசியதால் பரபரப்பு… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் ஜப்பான் வயகமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் புமியோ கிஷிடா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு வெடித்ததால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது. இச்சம்பவத்தில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பத்திரமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிரதமரை பத்திரமாக பாதுகாப்பு வீரர்கள் வெளியேற்றினர். பிரதமரை நோக்கி குண்டை வீசியதாக ஒருவரை கைது செய்த ஜப்பான் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததையடுத்து தற்போது பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகிரவும்...