Main Menu

ஜப்பானில் புகைபிடிப்பதற்கு தடை!

ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதனையடுத்து அங்கு புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இங்கு பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமுலுக்கு வந்ற்துள்ளது. இந்த சட்டத்தின்படி பாடசாலைகள், மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாகாண அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேற்கூறிய அனைத்து இடங்களிலும் இந்த சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அதன் நிர்வாகிகளுக்கு 5 லட்சம் யென் அபராதம் விதிக்கப்படும் எனவும் தடையை மீறி புகைபிடிக்கும் நபர்களுக்கு; 3 லட்சம் யென் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

பகிரவும்...