Main Menu

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் நீடிக்கும் கனமழை- 6 லட்சம் மக்களை வெளியேற்ற உத்தரவு

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

கியூஷு தீவில் கனமழை நீடிக்கும் என்றும், மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கியூஷு தீவில் உள்ள ககோஷிமா நகரில் நேற்று இரவில் இருந்து இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டும் 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதையடுத்து அந்த நகரில் உள்ள 6 லட்சம் மக்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜப்பான் கனமழை

வியாழக்கிழமை வரை அதீத கனமழை தீவிரமாக இருக்கும் என்றும், கியூஷு உள்ளிட்ட சில பகுதிகளில் மணிக்கு 80 மிமீ வரை மழை பெய்யலாம் என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...