Main Menu

ஜனாதிபதி தேர்தல் 2022 : முதல் சுற்றில் மக்ரோனுக்கு வெற்றி வாய்ப்புகள்?

2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைகள் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. வேட்பாளர்களை அறிவிப்பதும், வாக்குறுதிகளை அள்ளி தெளிப்பதும் என களம் பரபரப்பாக, கருத்துக்கணிப்புக்களுக்கும் பஞ்சமில்லை.

புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவில், தற்போதைய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முதல்கட்ட வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெறுவார் என தெரியவந்துள்ளது. 23 -25 % வீதமாக வாக்குகளை மக்ரோனும், 17 – 18% வீதமான வாக்குகளை Eric Zemmour ம், 16 வீதமான வாக்குகளை மரீன் லூ பென்னும் பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீபபுளிக் கட்சியின் சார்பாக போட்டியிடுபவர்களில் Xavier Bertrand அதிக வாக்குகளையும் (14%) அதன் பின்னர் Valérie Pécresse 10 வீத வாக்குகளையும், அதன் பின்னர் Michel Bariner 8% வீத வாக்குகளையும் பெறுவார்கள் என தெரியவந்துள்ளது.

இடதுசாரி கட்சியில் அதிக வாக்குகளை பெறும் வாய்ப்பு Jean-luc-Melenchon இற்கே உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறானும், முதல் கட்ட ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் மக்ரோனுக்கே அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தற்போதைய நிலவரம் மாத்திரமே. தேர்தல் நெருங்க நெருங்க கருத்துகணிப்புகளில் மாற்றம் வந்துகொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

துல்லியமான வெற்றி வாய்ப்புகளின் விபரங்கள் இதோ!

Emmanuel Macron 25,3 (=)

-Marine Le Pen 18,6 (-0,5)

-Eric Zemmour 15,4 (+1)

-Xavier Bertrand 14,2 (-0,2)

-Jean-Luc Mélenchon 9,1 (-0,2)

-Yannick Jadot 7,9 (+0,2)

-Anne Hidalgo 5,5 (-0,2)

பகிரவும்...