Day: October 28, 2021
சூடானில் ஆறு தூதர்கள் பதவி நீக்கம்: ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்புப் படைகள் தாக்குதல்!
சூடானின் ஆளும் இராணுவம், ஆறு தூதர்களை பதவி நீக்கம் செய்துள்ளது மற்றும் பாதுகாப்புப் படைகள் ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறையை கடுமையாக்கியுள்ளன. அரச ஊடகங்களில் நேற்று (புதன்கிழமை) பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட இந்த முடிவானது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, கட்டார்,மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் 2022 : முதல் சுற்றில் மக்ரோனுக்கு வெற்றி வாய்ப்புகள்?
2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைகள் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. வேட்பாளர்களை அறிவிப்பதும், வாக்குறுதிகளை அள்ளி தெளிப்பதும் என களம் பரபரப்பாக, கருத்துக்கணிப்புக்களுக்கும் பஞ்சமில்லை. புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவில், தற்போதைய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முதல்கட்ட வாக்கெடுப்பில் அதிகமேலும் படிக்க...
காவல்துறை அதிகாரி தற்கொலை! – இவ்வருடத்தின் 25 ஆவது சம்பவம்!
காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் Bayonne (Pyrénées-Atlantiques) நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை 49 வயதுடைய David எனும் அதிகாரியே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், இவரது மறைவுக்கு சகமேலும் படிக்க...
தலிபான்களுடன் இணைந்து செயல்பட சர்வதேச சமூகத்திற்கு பாகிஸ்தான், சீனா வேண்டுகோள்
ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தலிபான் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் மற்றும் சீனா வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள்மேலும் படிக்க...
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – லான்சூவில் ஊரடங்கு அமுல்!
சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரமான லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் அவசரநிலை தவிர ஏனைய காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடியிருப்பு வளாகங்களில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிச்சீட்டு முறை நடைமுறைபடுத்தப்படுவதாகமேலும் படிக்க...
2025ஆம் ஆண்டு வரை மக்கள் குறைவாக சாப்பிடுங்கள்: நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் வேண்டுகோள்!
உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியில், 2025ஆம் ஆண்டு வரை தனது நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ‘விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமைமேலும் படிக்க...
தமிழகத்தில் மீண்டும் மேல்சபை அமைகிறது- அடுத்த கூட்டத் தொடரில் மசோதா தாக்கல்
தமிழகத்தில் மேல்-சபையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பா.ஜனதா எம்.எல்ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 1986-ம் ஆண்டு வரை மேல்-சபை இருந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மேல்-சபையை கலைத்து விட்டார்.மேலும் படிக்க...
ஓ.பன்னீர் செல்வம் கருத்தில் தவறு எதுவும் இல்லை- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
சசிகலா தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தில் தவறு எதுவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக தங்க கவசம்மேலும் படிக்க...
ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் விமர்சிக்க முடியாது – சந்திரகாந்தன்
ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது. அதனுடைய நோக்கம் என்னவென்று அனைவருக்கும் தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ஒரு நாடு ஒருமேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பிரதமர் பாராட்டு
இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்களின் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாராட்டினை தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள் நேற்று மேலும் படிக்க...
ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!
ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் மற்றும் ஏனையமேலும் படிக்க...