Main Menu

செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக பிரதமர் ஜோன்சன் அறிவிப்பு!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது ஒரு சமூக, பொருளாதார மற்றும் தார்மீக கட்டாயமாகும் என்றும், தொற்றுநோயால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தபோதிலும் அவை பாதுகாப்பாக செயற்பட முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தேசிய முன்னுரிமை என்றும் பிரதமர் ஜோன்சன் மின்னஞ்சலில் எழுதியுள்ளார்.

முக்கிய தொழிலாளர்களின் குழந்தைகளைத் தவிர, தேசிய முடக்கநிலையின் போது இங்கிலாந்தில் பாடசாலைகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. மேலும் ஜூன் மாதத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டன.

இந்தநிலையில், தற்போது அனைத்து மாணவர்களும் செப்டம்பர் தொடக்கத்தில் பாடசாலைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் விரும்புவதாக பிரதமர் ஜோன்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பாடசாலைகள் மூடப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இனி மேலும் பாடசாலைகளை மூடுவது நல்லதல்ல. பாடசாலைகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விடயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் பாடசாலை படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.

இனி முடக்கிநிலை கடைப்பிடிக்கப்பட்டாலும் பாடசாலை மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பாடசாலைளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும்’ என கூறியுள்ளார்.

பகிரவும்...