சுதந்திர கட்சிக்கு அழைப்பில்லை சாமர சம்பத் தசநாயக்க எம்.பி.தெரிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் பேரணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
பதுளையில் சனிக்கிழமை(12) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சுதந்திர கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க அநுராதபுரத்திலேயே உள்ளார். எனவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் மாத்திரமே என்னால் அங்கு செல்ல முடியும். கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விக்கப்படாத நிலையில், என்னால் அந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்றார்.
