Main Menu

சீனாவில் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்!

சீனாவில் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின் தெரிவித்துள்ளார்.

சீன தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசி உருவாக்கிய நாட்டின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளநிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஜெங் யிக்சின் கூறுகையில், ‘சீனாவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். முடிந்தவரை அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உடல் தகுதி படைத்த அனைவருக்கும் பல்வேறு கட்டங்களில் தடுப்பூசி செலுத்தி கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அணை எழுப்பப்படும்’ என கூறினார்.

சினோஃபார்ம் துணை நிறுவனமான பெய்ஜிங் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், இரண்டு அளவுகளைப் பெற்றவர்கள் உயர் மட்ட ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறார்கள் என்றும் இடைக்கால முடிவுகள் காட்டுகின்றன.

மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் இடைக்கால பகுப்பாய்வை மேற்கோளிட்டு, சினோபார்ம் அதன் தடுப்பூசி 79.34 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

பகிரவும்...