Main Menu

சில்லறை விற்பனையாளர்கள் உணவு விலையைக் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை

சில்லறை விற்பனையாளர்கள் உணவு விலைகளை சந்தை விலைக்கு ஏற்றால் போல் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார அமைச்சர் Bruno Le Maire எச்சரித்துள்ளார்.

மொத்த விற்பனை நிலையங்களில் உணவுப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில்லறை விற்பனையாளர்களும் உணவுப்பொருட்களின் விலையை குறைக்கவேண்டும் என பொருளாத அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் அதைச் செய்யவில்லை என்றால் அவர்களை நிதியமைச்சகத்துக்கு வரவழைப்பேன். அது போதாதென்றால் என்வசம் உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி விலைக்குறைப்பைக் கொண்டுவருவேன்!” என மிக கடுமையாக எச்சரித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை வடக்கு பிரான்சில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்ட நிதியமைச்சர், அங்கு வைத்தே இதனைக் குறிப்பிட்டார்.  

பகிரவும்...