Main Menu

சிறுநீரக நோய் காரணமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

இலங்கையில் சிறுநீரக நோய் காரணமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சிறுநீரக நோய் காரணமாக 2016ம் ஆண்டு இரண்டாயிரத்து 135 பேரும், 2017ம் ஆண்டு இரண்டாயிரத்து 159 பேரும், 2018 இல் இரண்டாயிரத்து 187 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 17ஆயிரத்து 503 பேர் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 787 பேர் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.

அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும், வட மத்திய மாகாணத்திலும் சிறுநீரகநோய் காரணமாக அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...