Main Menu

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி குறித்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

கொலிஜியத்தின் குறித்த கோரிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி அவர் கோரிக்கை விடுத்த நிலையில், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  இதன்காரணமாக தலைமை நீதிபதி தஹில் ராணி தனது இராஜினாமா குறித்த முடிவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிவைத்தார்.

அத்துடன், கொலீஜியத்தின் பரிந்துரை குறித்தும், தனது பதவி விலகல் கடிதத்தின் மீதும் ஜனாதிபதி முடிவெடுக்கும் வரையில், தனது அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பது மற்றும் உயர்நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதில் இருந்தும் தலைமை நீதிபதி விலகியிருந்தார்.

இந்நிலையில், தஹில் ரமாணியின் இராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பகிரவும்...