Main Menu

“சாத்தியமற்ற விடயங்களை முன் வைத்து பேச முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்” – வரதராஜ பெருமாள்

ஜனாதிபதி தேர்தலில் சாத்தியமற்ற விடயங்களை முன்வைத்துவிட்டு வேட்பாளர்களுடனும் பேச முடியாமல் சிக்கி தவிக்கின்றனர் என வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 13 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து வேட்பாளர்களுடன் கலந்துரையாடவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஐந்து தமிழ் தேசியக் கட்சிகளும் இந்த கோரிக்கைகளை விட்டுவிட்டு யதார்த்த பூர்வமாக யார் சில விடயங்களை செய்து முடிப்பாரோ அவருக்கு ஆதரவினை வழங்க முன்வர வேண்டும்.

அந்தவகையில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அந்த துணிவு இருக்கின்றது. அவர் ஆட்சிக்கு வந்ததும் நாம் அதனை செய்விப்போம்.

இத்தனை நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூட்டமைப்பு முண்டு கொடுத்து வந்தது. அப்போதைய காலத்தில் ஏன் இந்த கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைக்கவில்லை.” என கூறினார்.

பகிரவும்...