Main Menu

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று முல்லைத்தீவிலும் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பாகங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்றிருந்தன.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(வியாழக்கிழமை) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1373 ஆவது நாளாக தொடர்ந்து போராட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்றைய போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கெடுத்திருந்ததுடன், போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் உயர்ஸ்தானிகருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார்.

பகிரவும்...