Main Menu

சமகால அரசாங்கம் நாட்டை பொருளாதார வலுமிக்க நாடாக மேம்படுத்தி வருகின்றது – பிரதமர்

பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்த நாட்டை பொறுப்பேற்ற சமகால அரசாங்கம் அதனை வலுவான பொருளாதார நாடாக மாற்றியமைத்து வருவதாக பிரதர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் பலமான ஓர் அரசாங்கம் இல்லை என குற்றஞ்சாட்டும் எதிர்வாதிகள் அன்று பலமான ஆட்சியை வைத்துக் கொண்டு 21 வருடங்கள் வரை 6 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தை வழங்க முடியாமல் போனதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் சமுர்த்தி அமைச்சு கிடைக்கப் பெற்று ஒரு வருடத்திற்குள் 6 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளது என குறிப்பிட்டார்

6 இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்டம் ஹோமாகம வில்பிரட் சேனாநாயக்க மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

வங்குரோத்து மிக்க நாடொன்றை பொறுப்பேற்று அதனை பலமான நாடாக மாற்றியமைக்க தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளது. கிராமிய மட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிப்பதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

மக்களால் முன்னேறிச் செல்லக்கூடிய பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் இலக்காகுமென அந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் எதிர்காலம் பற்றி சிந்தித்து புத்திசாலித்தனமாக செயற்பட்டதால் நாட்டை சரியான பாதைக்கு எடுத்து வர முடிந்துள்ளது. சமுர்த்தி நிவாரணத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையைப் பலப்படுத்தி அவர்களை நாட்டின் அபிவிருத்தி விடயங்களில் பங்குகொள்ளச் செய்யும் நோக்கில் புதியதாக சிந்திப்போம் என குறிப்பிட்டார். சுயமாக முன்னேறுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...